நாங்க தான் நெட்டிசன்ஸ்


​பத்து வருடங்களுக்கு முன்பு செல்போன் என்பது ஒரு பகட்டான விஷயமாக அனைவராலும் பார்க்கப்பட்டது. மெல்ல மெல்ல அது எல்லோர் கைகளிலும் தவழ ஆரம்பித்த பின்பு தோன்றியது தான் எஸ்.எம்.எஸ்(sms) கலாசாரம். அன்று அனைவராலும் விரும்ப்ப்பட்டது பார்வர்டு மெசேஜ்(forward message) தான்.பார்வர்டு மெசேஜ்களை சேவ்(save) செய்துவிட்டு அதை மற்றவர்களுக்கு அனுப்புவது அல்லது சிறு குழந்தை போல் நோட்டில் எழுதி வைத்துவிட்டு பின்னர் அதைத் டைப்(type) செய்து நம் நண்பர்களுக்கு அனுப்பும் பழக்கம் பெரும்பாலான அனைவரிடமும் இருந்தது. 


அந்த ட்ரென்ட்(trend) சற்றே மாறி குட் மார்னிங் குட் நைட் என்று பல கவிதைகளோடும் பழமொழிகளோடும் போட்டோக்களாக(photo) வலம் வந்தது. இந்த ட்ரென்ட்டின் உச்சகட்ட வளர்ச்சியாகவே மீம்சையும், ட்ரோல் போட்டோகளையும் வீடியோகளையும் நான் பார்க்கிறேன்.


இத்தகைய இணைய வளர்ச்சிக்கு அடித்தளமாகவும் அடிப்படைதளமாகவும் இருந்து இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் வானளாவிய ஒரு சமூக வலைதளம் முகநூல்(facebook). இங்கு  ஒன்றுக்கு மூன்று பேஸ்புக் அக்கவுண்ட்(Facebook account) வைத்திருப்பவர்களும் உள்ளனர். கேட்டால் ஒன்று ஒரிஜினல் மற்றவை ஃபேக்(fake) என்று கூறி விடுவார்கள். சிலரோ பேஸ்புக்கிற்கு எதற்கு ஒரிஜினல் ஐடி , எல்லாமே ஃபேக் தான் என்பார்கள் ஒருவித சிரிப்போடு. 


நாம் என்னதான்  சமூகத்திற்கு நல்லது  செய்ய  வேண்டுமென்ற  உயர்ந்த  எண்ணத்தில் அரசியல், சமூக கருத்துக்களை மீம்ஸ் வழியாக முகநூலில் பதிவேற்றி அத்தோடு சில இன்சொற்களையும் சேர்த்து மக்களை யோசிக்க வைத்தாலும்,  சிலநேரங்களில் மார்க் ஜுக்கர்பெர்க்கு(Mark Zuckerberg) அது பிடிக்காமல் போகவே பிளாக்  (block) செய்து விடுகிறார். அதான் ஒரு ஐடி பிளாக் ஆனால் இன்னொன்று  இருக்கே, அதுவும்  பிளாக் ஆனால் புதிதாக  கிரியேட்(create) செய்ய  வேண்டியதுதான் என்பதே பலரும்  கூறும் வேடிக்கையான  உண்மை. மேலும்  தங்கள் கருத்துக்களை தனக்கு எவ்வித  பாதிப்பும் இன்றி வெளியிட இத்தகைய  போலியான  முகமூடிகள் பலருக்கும்  தேவையாக உள்ளது. அதிலும்  குறிப்பாக  மீம்ஸ் ட்ரோல்களில் லைக்ஸூக்காகவும் ஷேர்க்காகவும் ஒரு படி ஏறி  நின்று விண்ணை  நோக்கி குறி வைப்பவர்களுக்கு இத்தகு போலி முகங்கள் அதிகம் தேவைப்படுகிறது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் என் முகநூல் நண்பர்கள் சிலரின் பெயர்கள்   நான் நல்லவன் ஆனால்  கெட்டவன், தமிழ் பித்தன்   MA, கடவுள் பாதி மிருகம் பாதி கமல், I am your best friend . என்னடா… என்னென்னவோ  உளறுகிறாள் என்று எண்ண வேண்டாம் இவை யாவும்  முகநூல் பெயர்கள் தான்.


என்னை எடுத்துக்கொண்டால், நான் கல்லூரியில் காலடி எடுத்து  வைத்த பின்பு தான் பிறரை ட்ரோல் செய்து மீம்  போடும் வழக்கம் எனக்குத் தெரிய வந்தது. அறிமுகமான  சில தினங்களிலேயே ட்ரோல் மீம் என்னை வெகுவாகக் கவர ஆரம்பித்தது. சமூகத்தில் நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட மீம்ஸ் வழியாகவும் ஒரு பிரபலத்தை ட்ரோல் செய்தும் கூறும்போது பலரும்  அதை ரசித்ததோடு மட்டுமில்லாமல் கமெண்டுகள் வழியாக தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.  இவையெல்லாம் என் ஆர்வத்தை மேன்மேலும் தூண்டும் விதமாக அமைந்தது. இவ்வாறு  நாட்கள் செல்லச்செல்ல எனக்குள் தோன்றிய ஓர் உணர்வு, உணர்வு மட்டுமல்ல கேள்வியும் கூட. ‘நாம போடுற  மீம்ஸ்  நல்லாதான் இருக்கு ஆனால் ஏன் லைக்ஸ்  வர மாட்டேங்குது?’ இதை என் முகநூல் நண்பர்களிடம்  கூறுகையில் அவர்கள் கூறிய பதில், ‘ட்ரோல் மீம்ஸ்ன்னு வந்துட்டாலே அங்க மரியாதையும் நாகரிகமும் எடுபடாது.வாழ்த்து சொல்ல மட்டும் தான் வெஜ்(veg) வார்த்தைகள் நல்லாயிருக்கும். கருத்து சொல்லும்போதோ பிறர் சொன்ன கருத்துக்கு எதிர்ப்பு சொல்லும்போதோ கொஞ்சம் கிண்டல், கேலி, நக்கல், கோபம் ன்னு உணர்ச்சிப்பூர்வமா நான்-வொஜ்ஆ (non-veg) இருந்தா தான் எல்லாருக்கும் பிடிக்கும். வாசித்ததும் தன்னையறியாமலேயே லைக் போட்டுவிடுவாங்க’. ஒரு நெட்டிசனாக இதை என் மனதில் வைத்துக்கொண்டு மீம் போட ஆரம்பித்தேன். லைக்ஸ்  பறந்தது. அதில் குறிப்பாக  எனக்குப் பிடித்த மீம் , தமிழிசை அவர்கள் மேடையில் பேசும் போட்டோவுக்கு அருகில் வடிவேலுவின் போட்டோவை வைத்து எடிட்(edit) செய்து why blood same blood என்று போட்டதுதான்.


அது ஏன் குறிப்பிட்ட சிலரை மட்டும் அதிகமாக ட்ரோல் பண்றீங்க ? அப்படின்னு நீங்கள் கேட்கலாம். சாதாரண ஆளை வச்சி ட்ரோல் பண்ண முடியாது. கலாய்க்கிறதுக்கான பத்து பொருத்தமும் பக்காவா இருக்கிறவங்கள தான் வச்சி  செய்ய முடியும். அப்படி நாங்கள் கேட்காமலேயே கன்டென்டுகளை(content) வாரி வாரி வழங்கும் வள்ளல்களை வைத்து தான் நாங்கள் ட்ரோல் பண்றோம். இதில் எங்கள் நெட்டிசன்களின் தவறு என்ன இருக்கு? நீங்களே சொல்லுங்க.


நெட்டிசன்களும் அரசியல்வாதிகள் மாதிரி தான். முதலில் மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மீம் கிரியேட்டிங் சாப்ட்வேர்ஐ(meme creating software) டவுன்லோடு செய்வார்கள். ஆனால் பேஸ்புக்கிலும் இன்ஸ்ட்டாகிராமிலும் கூகுள்+சிலும் ‘லைக்’ பட்டனை பார்த்ததும் அவர்கள் எண்ணம் மாறிவிடுகிறது. அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்களித்த வாக்குறுதிகளை மறந்துவிடுவதைப்போல, நெட்டிசன்களும் ஒரு மீம்க்கு 1k லைக் வந்ததும், இனி போடப்போகும் மீம்க்கு அதைவிட அதிகமான லைக் வரவேண்டும் என்பதற்காகவே கொஞ்சம் தன்நிலை தவறி விடுகிறார்கள் சிலர். சிலர் என்று ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேனென்றால் , நெட்டிசன்கள் தான் சமூகத்தில் நடந்த சில நல்ல விஷயங்களுக்கு பிள்ளையார் சுழி இட்டவர்கள்,   எங்கோ நடக்கும் சமூக பிரச்சினைகளை முதல் ஆளாக மக்களுக்கு சுட்டிக்காட்டுபவர்கள், சமூக மாற்றத்திற்கு உதவி செய்பவர்கள், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். நமக்குத் தெரியாத பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள அறிந்துகொள்ள உதவியாக உள்ளவர்கள். பெரும்பாலான  நெட்டிசன்களின் ட்ரோல்களில் கூட காமெடியைத் தாண்டி மக்களைச் சிந்திக்க வைக்கும் ஒரு சிறிய கருத்து இருக்கும். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் சாதாரண மக்களால் கேட்க இயலாத கேள்விகளைக்கூட ஒரு மீம் கிரியேட்டர் சுலபமாக இரு டெம்ப்லேட்ஐ(template) வைத்துக் கேட்டு விடுவார்.உலகமே குளோபல் வில்லேஜ்(global village)ஆக  சுருங்கிவிட்ட நிலையில் டோனால்டு ட்ரம்ப்(Donald Trumph)இடமே பக்கத்து வீட்டுக்காரர் போல் கேள்வி  கேட்டு கேலி செய்யும் தைரியம் நெட்டிசன்களுக்கே உள்ளது.


குறும்படம், யூ-ட்யூப்(you tube), மியூசிக்கல்-லீ, டப்ஸ்மேஸ்(dubsmash) போல் எங்கள் மீம் கிரியேட்டர்ஸ் மற்றும் ட்ரோல்  மேக்கர்ஸ்-ன் முகம் வெளித்தெரிவதில்லை என்றாலும், என்றோ ஒருநாள் நாங்கள் படைத்த மீம் ஒருவரை மகிழ்வித்திருக்கும். லைக், ஷேர், கமெண்ட்டுகளைத் தாண்டி ஒரு நெட்டிசனின் உச்சபட்ச ஆசை பிறரை சிந்திக்க வைப்பதும் சிரிக்க வைப்பதும் மட்டுமே. எங்கள் ட்ரோல்  வீடியோ அல்லது  ட்ரோல்  மீம்ஸை பார்ப்பவர்கள் அதை ரசித்தால் போதும், எவரேனும் ஒருவர் மனதில் நாங்கள் கூற வரும் செய்தி புரிந்தால் போதும், பதிந்தால் போதும். ஒரு சிறு மாற்றத்தை தங்கள் பாலோவர்ஸ்(followers) மனதில் விதைக்கும் மனநிறைவுக்காகவே நெட்டிசன்களில் பலர் இதைத்  தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள். சிலர் லைக்ஸ்க்காக இறங்கி அடிக்கலாம் ஆனால் பாசிட்டிவாக பயன்படுத்துபவர்களே இங்கு அதிகம். அடிமையாகிவிட்டோம் லைக்ஸீக்கு என்று நீங்கள் நினைத்தால்  நினைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு  நாங்கள் கூற வரும் செய்தியே முக்கியம். அச்செய்தியை விரைவாக அனைவரிடமும் எடுத்துச்செல்ல எங்களுக்கு ட்ரோலிங் பர்சினாலிட்டிஸ்(trolling personalities) தேவை. அத்தகைய ட்ரோலிங் பர்சினாலிட்டிஸ் தான் அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களும் , ஒரு நிகழ்வை யாரை வைத்து எவ்வாறு  கூறினால் அது அனைவரிடமும் ரீச்(reach) ஆகும் என்பது நெட்டிசனுக்குத் தெரியும்.  நெட்டிசன்கள் என்னதான் ட்ரோல் செய்தாலும் அதிலுள்ள நன்மையையும் தீமையையும் அன்னப்பறவை போல பிரித்தெடுப்பது இணைய பயன்பாளர்களின் கடமை. நெட்டிசன்கள் ட்ரோல்  மீம்ஸ் கலாசாரத்தை பாசிட்டிவ்வாக பயன்படுத்தினாலும் நெகெட்டிவ்வாக பயன்படுத்தினாலும் அதற்கான தீர்ப்பை மக்கள் தங்கள் விரல்நுனி லைக் மூலம் வழங்கி விடுவார்கள். எது  எப்படியோ, எங்களுடைய  குறும்பு கலந்த ட்ரோல் மீம்ஸை மக்கள் ரசிக்கிறார்கள் என்பதே உண்மை.உங்களுக்கு இந்த கட்டுரை புடிச்சிருந்தால்

லைக் பண்ணுங்க;

கமெண்ட் பண்ணுங்க;

ஷேர் பண்ணுங்க;

மறக்காமல்

சப்ஸ்கிரைப் பண்ணுங்க. ..

(மை மைணட் வாயஸ்: கடைசியில யூ-டியூப் சேனலைப் போல உளற வச்சிட்டீங்களே பா)

Advertisements

One thought on “நாங்க தான் நெட்டிசன்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s